விலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வே

விலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வேர் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சாஃப்ட்வேர் இலவசம் என்பது...

விலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பாற்ற அற்புதமான சாஃப்ட் வேர் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சாஃப்ட்வேர் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய சாஃப்ட்வேரின் உதவியால் சென்னை மாநகர காவல்துறையின் ‘சைபர் க்ரைம்’ பிரிவினர், காணாமல் போன நோக்கியா ‘என் (ஸீ) 70’ மாடல் செல்போனை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த விக்ரம் என்ற இளைஞர் தனது செல்போனில் ‘கார்டியன்’ என்கிற செல்போன் திருட்டுத் தடுப்பு சாஃப்ட்வேரை இணைய தளத்திலிருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்திருந்தார். ‘கார்டியன்’ சாஃப்ட்வேரின் சிறப்பம்சம் இதுதான். அதாவது, ‘இந்த சாஃப்ட்வேர் பதிவுசெய்த செல்போன் ஒருவேளை திருடு போனால், அதில் ஒவ்வொரு முறையும் போடப்படும் புதிய சிம் கார்டுகளின் நம்பரை உடனடியாக இந்த சாஃப்ட்வேர் காட்டிக் கொடுத்துவிடும்.’ எப்படி என்கிறீர்களா? ‘கார்டியன்’ சாஃப்ட்வேர் லோடு செய்யப்பட்ட நம் செல்போனில் முதல் வேலையாக, நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் செல்போன் நம்பரைப் பதிவு செய்துவிட வேண்டும். இப்படிச் செய்தால், நம் செல்போன் திருடு போகும்பட்சத்தில் அதில் இருக்கும் ‘கார்டியன்’ சாஃப்ட்வேர் புதிய சிம் கார்டுகளின் எண்களை நாம் ஏற்கெனவே கொடுத்திருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். தகவலாக அனுப்பிக் கொண்டேயிருக்கும். இதை வைத்துத் திருடு போன செல்போனை யார் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அதை மீட்கலாம். கடந்த மாதம் விக்ரம், சென்னை சூளைமேட்டிலிருக்கும் தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருக்கிறார். அப்போது அவரது செல்போன் தொலைந்துபோய் விட்டது. உடனே, சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில், தொலைந்துபோன செல்போனில் டவுன்லோட் செய்திருந்த ‘கார்டியன்’ சாஃப்ட்வேர், அந்த போனில் புதிதாகப் போடப்பட்ட ஒவ்வொரு சிம் கார்டின் எண்ணையும் விக்ரம் ஏற்கெனவே அந்த போனில் பதிவு செய்திருந்த அவருடைய சகோதரியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம் சூளைமேடு போலீஸாரிடம் விக்ரம் எடுத்துச் சொல்லியும், பெரிய நடவடிக்கை ஒன்றும் இல்லை. எனவே, நம் அலுவலகத்துக்கு வந்தார் விக்ரம். விக்ரமை அழைத்துக் கொண்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் சைபர் க்ரைம் உதவி ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு உதவி ஆணையர் டாக்டர் சுதாகரிடம் புகார் செய்தோம். அவரிடம் ‘கார்டியன்’ சாஃப்ட்வேர் பற்றியும் அது அனுப்பிய சிம் கார்டு எண்களையும் சொன்னவுடன் மிகவும் உற்சாகமானார். உடனடியாக, திருடு போன செல்போன் தற்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். மறுநாள் பிற்பகல் நம்மையும் விக்ரமையும் அழைத்த உதவி ஆணையர் டாக்டர் சுதாகர், திருப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரமின் செல்போனை அவரிடம் ஒப்படைத்தார். ‘‘விக்ரமின் செல்போன் நான்கைந்து கைகள் மாறி கடைசியாக திருப்பூரில் இருந்ததை எங்கள் புலன்விசாரணை மூலம் கண்டுபிடித்தோம். இதற்கு விக்ரம் தன் போனில் போட்டிருந்த ‘கார்டியன்’ சாஃப்ட்வேர்தான் பெரிதும் உதவியது. பொதுவாக, சென்னையில் மாதம்தோறும் சுமார் 150 முதல் 200 செல்போன்கள் காணாமல் போவதாகப் புகார்கள் பதிவாகிறது. ஐ.ஈ.எம்.ஐ. எனப்படும் செல்போனின் தனி அடையாள குறியீட்டு எண் குறிப்பிட்டு வரும் புகார்களை செல்போன் சேவை வழங்கும் ஆபரேட்டர்கள் மூலம் கண்காணித்து, காணாமல் போன செல்போன்களை மீட்டு வருகிறோம். எழுபது சதவி கிதத்துக்கு மேல் ரெக்கவரி செய்து உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டு வருகிறது. செல் போன் திருட்டைத் தடுக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக பழைய செல்போன்களை வாங்காதீர்கள். ஒருவேளை தெரிந்தவர்கள் பயன்படுத்திய செல்போனை வாங்க நேர்ந்தால் பில்லைக் கேட்டு வாங்குங்கள். பெரும்பாலும் பழைய செல்போன்களை வாங்குபவர்கள் திருட்டு போனை வாங்கிய வழக் கில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. அடுத்து, செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் செல்போனின் தனி அடையாள எண்ணான ஐ.ஈ.எம்.ஐ. எண்ணைத் தனியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் செல்போனில் *#06# என்று அழுத்தினால் போதும்... ஐ.ஈ.எம்.ஐ. எண்ணைத் தெரிந்து கொள்ளலாம். நவீன ரக செல்போன்களை வைத்திருப்பவர்கள் ‘கார்டியன்’ போன்ற சாஃப்ட்வேர்களைப் பதிந்து வைத்துக் கொண்டால், செல்போன் திருடு போனால் அதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும். சென்னைக்குள் இருப்பவர்கள் தங்கள் செல்போன் காணாமல் போனால் cybercrime@rediffmail.com(சைபர்க்ரைம் @ ரிடிஃப்மெயில்.காம்) என்ற மின்னஞ்சலில் புகாரை அனுப்பினால் அதனடிப்படையில் உரிய நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும்’’ என்றார் டாக்டர் சுதாகர். ‘கார்டியன்’ சாஃப்ட் வேர் மூலம் தன் செல் போன் உடனடியாகக் கண்டு பிடித்துத் தரப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த விக்ரம், ‘‘கார்டியன்சாஃப்ட்வேரை http://www.download.com/Guardian/3000-11138_4-10612971.html, http://www.symbian-toys.com/guardian.aspx ஆகிய இணையதள முகவரிகளில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்’’ மொத்தத்தில், விலை உயர்ந்த செல்போன்களுக்கு ‘கார்டி யன்’ போன்ற இலவச சாஃப்ட்வேர்கள் நிச்சயமாகவே ‘கார்டியன்’தான்! செல்போன் திருட்டு தடுப்பு சாஃப்ட்வேரான ‘கார்டியனை’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இணைய தளங்கள் மூலமாக கம்ப்யூட்டரில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிறகு, டேட்டா கேபிள் மூலமாக செல்போனில் குறிப்பிட்ட இந்த சாஃப்ட்வேரை பதிந்து கொள்ளலாம். ‘நோக்கியா’ கம்பெனி மாடல்களான 6600, 7610, 6630, 6670 என்&70, 72, 80, 93, 95 ஆகிய செல்போன்களில் இந்த சாஃப்ட்வேர் சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலும், இந்த மாதிரியான செல்போன்களை வாங்கும்போது இணை உபகரணங்கள் என்று சொல்லி கொடுக்கப்படும் சார்ஜர், ஹேண்ட்ஸ் ஃப்ரீ, மைக் போன்ற பொருட்களில் இந்த டேட்டா கேபிளும் அடங்கும். மேலே குறிப்பிட்ட இந்த மாடல் செல்போன்களைத் தவிர, ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான செல்போன்களில் இதுபோன்ற திருட்டுத் தடுப்பு சாஃப்ட்வேரை நாம் பதியவைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. அந்த குறைபாட்டை நீக்குவதற்கான முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வரும் செல்போன் நிபுணர்கள், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா செல்போன்களுக்கும் திருட்டு தடுப்பு சாஃப்ட்வேரை பதிய வைக்கும் முயற்சி சாத்தியப்படும்’ என்கிறார்கள்.

Related

உங்களுக்கு உதவும் சட்டங்கள் 3731971151816048351

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item