ஆரோக்கியமாக இருக்க சில எளிய வழிகள்-16

நம்மில் பலருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் உடலில் நாம் விரும்புகிற ஆரோக்கியம் இருக்கிறதா? என்ற ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் பதில...

நம்மில் பலருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் உடலில் நாம் விரும்புகிற ஆரோக்கியம் இருக்கிறதா? என்ற ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் பதில் சொல்ல முடியாது. காரணம் கெட்ட பழக்கங்கள் மட்டுமே உடலை பாதிப்பது இல்லை. நல்ல பழக்கங்கள் இல்லாததும் நம் உடலை பாதிக்கிறது. ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் அதை விடுவதற்கு சிறு சிறு முயற்சியாவது செய்கிற நாம், நல்ல பழக்கங்களுக்கு வரும்போது அதை உருவாக்கிக் கொள்வதற்கு எந்த சிரத்தையும் எடுப்பது இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு நாளாக சிகரெட்டை கைவிட்டுப் பார்க்கிறவர்கள் பத்து நிமிஷம் நடைப் பயிற்சி பற்றி யோசிப்பதே இல்லை. இந்தப் பிரச்சினை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் நம்மைக் காப்பாற்றுவது போலவே, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்கள் இனிப்புச் சுவை உடையவை. சுலபத்தில் அடிமைப்படுத்தும். நல்ல பழக்கங்கள் கசப்பு. ஆனால் பழகப்பழக இனிப்பைக் காட்டும். அந்த இனிப்பைப் பெற சில நேரம் நாம் கசப்பைப் பழக வேண்டும். எப்படி? கீழே அதற்கான சில எளிய வழிகள் இருக்கின்றன. பயன்படுத்தி மகிழுங்கள். நாள் ஒன்றுக்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் இனி தினமும் என்று முடிவு செய்யாதீர்கள். முப்பது நாட்களுக்கு மட்டும் என்று முடிவு செய்யுங்கள். முதல் நாள் முடிந்தவுடன் இன்னும் இருபத்தொன்பது நாட்கள்தான் என்று தோன்றும். அடுத்த நாளில் உங்களின் இலக்கில் மற்றொரு நாள் குறையும். இப்படியே போகப்போக நான்காவது வாரத்தில் சரி இது கடைசி வாரம் என்று தோன்றும். கடைசி நாளில் இந்த ஒரு மாதம் நடந்ததில் என்ன என்று யோசித்துப் பாருங்கள். முதல் நாள் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து சிரமப்பட்டு எழுந்த நீங்கள் முப்பதாவது நாள் எழுப்பாமல், அலாரம் அடிக்காமல் எழுந்திருந்ததை உணர முடியும். சீக்கிரம் எழுந்ததால் இந்த மாதம் முழுக்க உங்கள் வேலைகள் பதட்டமின்றி ஏதோ நிறைய நேரத்துடன் முடித்திருப்பதை உணருவீர்கள். உங்கள் தொந்தி சற்று சரிந்திருக்கிறது. இடுப்புப் பகுதியில் ஒரு சுதந்திரம். மூச்சு சுலபமாக இருக்கிறது. தினமும் நடந்ததில் புதிதாக ஒரு நண்பர் கிடைத்து அதனால் பல நாள் ஆடிட்டிங் பிரச்சினை ஒன்று தீர்ந்திருக்கிறது. உங்கள் புத்துணர்ச்சி சில மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏதோ ஒரு நோயைப் பற்றி பேச _ கேட்க நேரிடும் போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிகிறது. உங்களுக்கு சற்று சர்வீஸ் செய்து விட்டது போல இருக்கிறது. சுலபமான அசைவுகள். அட.. இவ்வளவு சுகமா நடப்பதனால்? முப்பதாவது நாள் இந்தப் பழக்கம் உடலில் ஒட்டிக் கொண்டு நீங்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் விடியலில் விழிப்பு தட்டும். அவ்வளவுதான்... நல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும் தொடருங்கள். பிறகு பழக்கம் உங்களைத் தொடரும். Anything good commit thirty days! ஜிம்முக்குப் போவது என்று முடிவு செய்தால் தினமும் செல்லுங்கள். ஷட்டில் காக் விளையாட நினைத்தால் தினமும் விளையாடுங்கள். பாக்சிங் என்றால் தினமும் பங்ச்! பரண்மேல் ஏறினால் தினமும் உயரம்! உடற்பயிற்சிக்கு என்று எது செய்தாலும் தினமும் செய்யுங்கள். தினமும் என்பதுதான் நல்ல பழக்கங்களைக் கைக்கொள்ளும் தாரக மந்திரம். வாரத்திற்கு இரண்டு நாள், மூன்று நாள் என்றால் சோம்பல். இடை நாட்களில் தடை பட்டு விடும். வேண்டாம். Anthing good make it daily! படிக்க, நடக்க, பாட என்று எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் ஆரம்பிக்கும் போது எளிமையாக மிக எளிமையாக ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று தொடங்குங்கள். தொடங்கியிருக்கிறோம் என்பதை நீங்களே உணராத அளவிலான நேரத்தில் தொடங்குங்கள். அடுத்த வாரம் பதினைந்து நிமிடம். அதற்கடுத்த வாரம் இருபது நிமிடம். இப்படியே அதிகப்படுத்துங்கள். இதுவே நீங்கள் நினைத்ததை அடைய சுலபமான வழி. இதை விட்டு விட்டு எடுத்தவுடனே ஐம்பது பங்கி, பத்து முட்டை, காபி கட், கம்பங்கூழ் என்று தடாலடியாக மாற்றாதீர்கள். மூன்று நாள்தான் நடக்கும். நான்காவது நாள் பகல் நாலுமணிக்குத்தான் எழுந்திருப்பீர்கள். என்னப்பா? என்று அம்மா கேட்டால் முனகி ‘ஸ்ட்ராங்கா காபி கொடு’ என்பீர்கள். களிதான செய்யச்சொன்ன என்று அம்மா கேட்டால் முறைப்பீர்கள். தடாலடியில் முக்கியப் பிரச்சினை தொடர முடியாது. Anthig good start simple! புதிதாக முயற்சி செய்கிற எந்த நல்ல பழக்கத்தையும் நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதுதான் அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் அதிகப்படுத்தும். அந்தச் செயலை ஞாபகப்படுத்திக் கொள்வதை விட அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு செயல் பழக்கமாக மாறுவதற்கு ஆரம்ப காலங்களில் ஞாபகப்படுத்திக் கொள்வது பெரிய அளவில் உதவியாக இருக்கும். Anything good Remind Yourself! ஒரு நல்ல விஷயம் நல்ல பழக்கமாக மாறுவதற்கு ‘திரும்பத் திரும்ப’ என்ற சொல் மற்றுமொரு அடிப்படை மந்திரம். ஒவ்வொரு நாளும் அதே நேரம், அதே அளவு, அதே வேகம், அதே உழைப்பு, அதே கவனம், அதே முறை என்று திரும்பத் திரும்ப என்ற வார்த்தைக்குள் எவ்வளவு ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். ஒரு முப்பது நாட்களுக்கு இந்த ‘அதே’க்களை பயன்படுத்தினால் போதும். எந்த நல்ல செயலும் பழக்கமாக ஒட்டிக் கொண்டு விடும். Anything good stay consistant! காலையில் ஜாகிங் செய்யும் முதல் இரண்டு நாள் வெறுப்பாகத்தான் இருக்கும். ‘தாத்தா தினமும் பத்து மணிக்குத்தான் தூங்குவார். எண்பது வயது வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்...’ என்று கேள்வி வரும். ‘பாட்டி என்ன ஜாகிங்கா செஞ்சுச்சு... பல்லாங்குழிதானே விளையாடுச்சு’ என்று சப்பைக் காரணங்கள் நல்ல செயல்களுக்கு எதிராகத் தோன்றும். சோவையாக யோசித்தபடி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தப் பெண்ணைக் கவனிக்க முடிகிறது. அட... யார் இது?... நம்ம ஏரியால பாத்ததே இல்லையே? என்று கவனித்து ஓட்டத்தில் சுவாரசியம் வரும். அடுத்த நாள் காலை அலாரம் அடித்ததும் தாத்தா, பாட்டி யெல்லாம் வந்து கவனத்தைக் கலைக்க மாட்டார்கள். பார்க் பெண் ஞாபகத்துக்கு வந்து பட்டென்று சுறுசுறுப்பு காலைக் கடிக்கும். அவளுக்காக ஓடினாலும் சரி, உங்களுக்காக ஓடினாலும் சரி. ஓடுவது நல்லது. இப்படி ஏதாவது ஒரு காரணத்தை உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்கும். ஆரோக்கியம் புதிதாகவும் கிடைக்கும். Secret is Get a buddly அவ்வப்போது ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை நாம் முயற்சி செய்து தோற்கிறோம். சிலர் விடாப்பிடியாக கடைப்பிடித்துத் தப்பிக்கிறார்கள். தினமும் அரைமணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்று முதலில் திட்டமிடுகிறோம். நண்பருடன் தொலைபேசியில் பேசுகிறோம். அப்பாடா... இன்று ‘கோலங்கள்’ பார்க்காமல் தாண்டியாகிவிட்டது என்று சாப்பிடுகிறோம். பிறகு படுக்கும் போது மெல்ல சானல் செய்தி கவனிக்கிறோம். தூக்கம் வராத மாதிரி இருக்கிறதே என்று யோசித்தபடியே ரிமோட்டைத் தடவியதில் தேன் கிண்ணம் ஆளை கிரங்கடிக்கிறது. வழக்கமாக கோலங்கள், மதுரையோடு முடித்துக் கொண்ட நாம் மாறாக சிரி சிரி முடித்து சௌத்ஃபுல் வரை வந்தாகிவிட்டது. அப்புறம் எதுக்கு வம்பு என்று இப்போதெல்லாம் எட்டரை மணிக்கு சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு கோலங்கள் போடத் தயாராகிவிட்டோம். இதுதான் கடைசியாக முயற்சி செய்தது என்றால் கூட பரவாயில்லை. மறுபடியும் ஒரு தடவை முயற்சி செய்யுங்கள். பத்து நாள் ஓடி நின்று விட்டேன் என்று திரும்ப ஓடத் தொடங்குங்கள். அந்த நாள் அப்பழக்கத்தைக் கைவிட்டேன் என்றால் திரும்ப அதைத் தொடருங்கள். Try try one you quit Finally! ‘‘எடுத்த உடனே பத்து கிலோ எடை குறைக்கப் போகிறேன்’’, இனிமேல் ‘டீ, காபியே கிடையாது’, ‘ஒன்லி வெஜ்’ என்று பெரிய பெரிய திட்டத்தில் கை வைக்காதீர்கள். இரண்டு வாரம் காய்கறிகளைக் கடித்துத் துப்பிவிட்டு முடிவு ஞாயிறில் நண்பர்களோடு சேர்ந்து அடுத்த நான்கு வாரங்களுக்கும் சேர்த்து கோழியை இல்லை இல்லை கோழிகளைச் சாப்பிட்டு விடுவீர்கள். (பறவைக் காய்ச்சல் பயம் வேறு சுவையை அதிகமாக்கும்). இதே மாதிரி குழப்பங்களில் சிக்கி தோல்வி அடையாமல் ஒரு சிறிய இலக்கை வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் ஒரு கிலோ எடை குறைந்தால் போதும். அதற்காக எளிய மாற்றங்களை தினசரி வாழ்வில் எடுங்கள். இப்படி இயங்கும் போது கடைப்பிடிக்கிற பழக்கங்கள் உங்களுக்கு கடுமையாக இருக்காது. பழக்கமும் மெல்ல கைக்கு வரும். Fix a small farget! உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்கள் என்றால் உடனே அதில் முழுமையை எதிர்பார்க்காதீர்கள். காலில் ஷ¨ லேஸ் அறுந்து விட்டதற்காக அன்றைய ஜாகிங்கை நிறுத்தாதீர்கள். வெறும் காலோடு ஓடலாம். தப்பில்லை. பெர்ஃபெக்ஷன் என்பது பழக்கத்தைக் கைக்கொள்ள முடியாமல் உங்களை நகர்த்தி விடும். நல்ல பழக்கங்களை முயற்சி செய்யும் போது இம்பெர்ஃபெக்ஷன் என்பது அனுமதிக்கப்பட வேண்டியது. எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை விட எது சரியாக இருக்க வேண்டுமோ அது சரியாக இருந்தால் போதும். Be Imperfect! பழக்கத்தை மாற்றும் செயல்களில் இந்த ‘ஆனால்’ என்பது மிக முக்கியமான ஃபார்முலா கீ என்று பல்வேறு சைக்கலாஜிக்குகள் உறுதி செய்திருக்கிறார்கள். எதிர்மறையாக ஒரு செயலைச் சிந்திக்கும் போது ஆனால் என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். ‘தினமும் அஞ்சு கிலோ மீட்டர் ஓட முடியாது என்னால... ஆனால் கொஞ்ச நாள் ஆனா முடியும்னு நினைக்கறேன்...’ அவ்வளவு தான். இந்த ‘ஆனா’வை’ பயன்படுத்தினால் எந்த பழக் கத்தையும் நீங்கள் கைக் கொள்ள முடியும். Use the word "But"! நீங்கள் எதை விட்டுவிட நினைக்கிறீர்களோ அல்லது எதை பற்றிக்கொள்ள நினைக்கிறீர்களோ அதற்கு எதிரான காரணிகளை உங்கள் சுற்றுப்புறங்களில் இருந்து நீக்குங்கள். முதல் முப்பது நாட்களுக்குப் போதும். டி.வி. வேண்டாம் என்றால் ஒரு மாதம் கேபிளை கட் செய்யுங்கள். (ஆப்பரேட்டரிடம் சொல்லிவிட்டு!) கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்றால் ஃப்ரிட்ஜில் வைத்து காப்பாற்றுகிற ஸ்வீட்ஸை அகற்றுங்கள். கிச்சனில் நெய்க்கு தபா. காரக் குழம்புக்கு நெய்க்கு பதில் நெல்லி வத்தல். வீட்டில் நோ பிஸ்கட்ஸ். இந்த மாதிரி உங்களுக்கு எது தேவையோ அதை உருவாக்கும் சுற்றுப்புறங்களை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள். மேசையில் மைசூர்பாகை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வாக்கிங் போகாதீர்கள். Remove Temptation! குண்டான நண்பர்கள் இருக்கிறவர்கள் சீக்கிரமே குண்டாகி விடுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்திருக்கிறது. யார் மாதிரி நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரைக் கண்ணாடியில் பாருங்கள்! ‘உன் நண்பனைக் காட்டு நீ யார் என்று சொல்கிறேன்...‘ என்று காந்திஜி சொன்ன வாசகம் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். எனவே,Be Associate with Role model! முடிவுகளை எதிர்பார்த்தால் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டால் மனம் சோர்வடைந்து விடும். பரிசோதனைகள் அப்படி அல்ல. அதில் தோல்விகள் கிடையாது. வெவ்வேறு பதில்கள் அவ்வளதுதான். முப்பது நாட்களுக்கு ஜாகிங் செய்தால் இரண்டு கிலோ எடை குறையும் என்று எதிர்பார்க்காதீர்கள். முப்பது நாட்களுக்கு ஓடினால் என்ன ஆகிறது என்று எதிர்பாருங்கள். ஒருத்தருக்கு எடை குறையலாம். ஒருத்தருக்கு முதுகுவலி குறையலாம். ஒருத்தருக்கு புத்துணர்ச்சி அதிகமாகலாம். ஒருத்தருக்கு புதிய தோழி கிடைக்கலாம். வெவ்வேறு விடைகள். ஆனால் எல்லாமே நல்லது. Run it as an Experiment! இந்த முறை அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட(NLP) முறை. பெரிதாக ஒண்ணுமில்லை. படு சுலபம். சிகரெட்டை விட வேண்டும் என்றால் முதலில் அதைக் மனக்கண்ணில் பாருங்கள். சிகரெட்டை எடுக்கிறீர்கள், பற்ற வைக்கிறீர்கள். உதடுக்கு அருகில் போகும் போது இது தேவையா என்று யோசிக்கிறீர்கள், பின் தூக்கி வீசுகிறீர்கள். அவ்வளவுதான், இந்தக் காட்சியை தினமும் மனக்கண்ணில் காணுங்கள். முப்பது நாட்களுக்குச் செய்யுங்கள். நல்ல செய்தியைப் பெற்று விடுவீர்கள். Swist! உடற்பயிற்சி செய்கிறீர்கள், காலையில் ஓடுகிறீர்கள், மாலையில் நடக்கிறீர்கள் என்றால் முதலில் அது சம்பந்தமான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் அரை மணி நடந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புதிய உணவு முறைக்கு மாறுகிறீர்கள் என்றால் காபிக்கு பதில் கம்பு எவ்வளவு நல்லது என்பதை உணருங்கள். பின் கம்பு வரும் போது பலன் ஞாபகத்திற்கு வரும். காபி சுவை வராது. Know the benefits! ஆரோக்கியத்திற்காக உங்களுக்காக வேறுபடும் உங்கள் விஷயங்களைச் செய்ய முடியாது. நீங்கள் நடந்தால்தான் உங்களுக்கு ஆரோக்கியம். வேறு யாரும் உங்களுக்காகச் செய்ய முடியாது. உதவி இது. வாழ்வு உங்களுடையது. உங்களுக்காக நீங்கள் உதவி செய்து கொள்ளுங்கள். Do it for Yourself!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8357046035810861489

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item